ஜெனீவாவின் ஒரு முக்கிய அடையாளச் சின்னமான பாலாய்ஸ் வில்சனில் உள்ள மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் அலுவலகத்திற்கு, அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையாளர் அலுவலகம் (UNHCR) இடம்பெயர உள்ளது.
மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையாளர் லுவலகம், பலாய்ஸ் டெஸ் நேஷன்ஸ்-க்கு மாறுகிறது.
ஐ.நா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இன்று பத்திரிகையாளர்களிடம்,இதனை உறுதிப்படுத்திய போதும், “தற்சமயம் எங்களிடம் சரியான திகதி இல்லை,” என்று கூறினார்.
கடந்த ஆண்டு UNHCR-இல் பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், அதன் தற்போதைய தலைமையகம் மிகவும் பெரியதாகிவிட்டது என்பதே இந்த முடிவுக்குக் காரணமாகும்.
அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிடமிருந்து வரும் நிதியுதவி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தலைமையகத்தில் உள்ள சில பதவிகள் உட்பட, உலகளவில் சுமார் 5,000 UNHCR பணியிடங்கள் குறைக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையால் வாடகைக் கட்டணத்தில் சுமார் 50% சேமிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
மூலம்- swissinfo


