20.6 C
New York
Wednesday, September 9, 2026

மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த 2 வயதுச் சிறுவன்.

சென் காலன், புருனாடெர்ன் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 10:15 மணிக்கு, ஒரு சிறு குழந்தை மூன்றாவது மாடி ஜன்னலிலிருந்து கீழே விழுந்து காயம் அடைந்துள்ளது.

இந்த விபத்து ஆபோடனில் உள்ள அகதிகள் தங்குமிடத்தில் நிகழ்ந்தது.

- Advertisement -

விரைவில் இரண்டு வயதை எட்டவிருக்கும் அந்தச் சிறுவனுக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விரைவில் இரண்டு வயதை எட்டவிருக்கும் அந்தச் சிறுவன், கீழே விழுந்த பிறகும் சுயநினைவுடன் இருந்தான். மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்திலேயே அவனுக்கு முதற்கட்ட மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டதால், அந்தக்குழந்தை பின்னர் ரெகா விமான அம்புலன்ஸ் சேவை மூலம் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

இந்தச் சமப்வம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து சென் காலன் மாகாண காவல்துறை தற்போது விசாரித்து வருகிறது. தற்போதைய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், இது ஒரு விபத்து என புலனாய்வாளர்கள் கருதுகின்றனர்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles