19.8 C
New York
Friday, July 24, 2026

நாணய முறைகேடு தொடர்பான அமெரிக்காவின் கண்காணிப்புப் பட்டியலில் சுவிஸ்.

நாணய முறைகேடு தொடர்பான அமெரிக்காவின் கண்காணிப்புப் பட்டியலில் மேலும் ஒன்பது நாடுகளுடன், சுவிட்சர்லாந்தும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அமெரிக்க அறிக்கையின் அடுத்த பதிப்பில் சுவிஸ் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் இந்த அறிக்கை, அமெரிக்காவின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளின் நடைமுறைகளை ஆய்வு செய்கிறது.

இந்த 9 நாடுகளும் அமெரிக்காவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் சுமார் 80 சதவீதத்தைக் கொண்டுள்ளன.

அமெரிக்க நிறுவனங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நியாயமற்ற நாணய நடைமுறைகளை எதிர்த்துப் போராடுவதே இதன் நோக்கம் என்று அமெரிக்க திறைசெரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாணய முறைகேடு குற்றச்சாட்டுகளை சுவிஸ் தேசிய வங்கி (SNB) தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

கடந்த செப்டம்பரில், கூட்டாட்சி நிதித் துறை (FDF), தேசிய வங்கி மற்றும் அமெரிக்க திறைசேரி ஆகியவை பேரியல் பொருளாதாரம் மற்றும் நாணய மாற்று விகிதம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஒரு கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டன.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles