பியலில் உள்ள நியூமார்க்ட்ஸ்ட்ராஸ் தெருவில் நேற்று அதிகாலை 4:25 மணிக்கு பின்னர், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதாக பெர்ன் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
40 ஆம் எண் வீட்டில் படுகாயமடைந்த ஒருவர் அம்புலன்ஸ் குழுவினரின் முதற்கட்ட சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
முதற்கட்ட அறிக்கைகளின்படி, நியூமார்க்ட்ஸ்ட்ராஸ் பாலத்தில் இரண்டு ஆண்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. சந்தேகப்படும் குற்றவாளி சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டார்.
பெர்ன் மாகாண காவல்துறை, பெர்னீஸ் ஜூரா-சீலாந்து பிராந்திய அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மூலம்- 20min


