25 C
New York
Saturday, August 29, 2026

பூமியில் இருந்து 1 லட்சம் அடிக்கு மேல் விண்வெளி எல்லையில் இருந்து கீழே போடப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன்

பூமியில் இருந்து 1 லட்சம் அடிக்கு மேல் விண்வெளி எல்லையில் இருந்து கீழே போடப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன், எந்த சேதமும் இல்லாமல் உயிர் பிழைத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

இந்த சாதனை முயற்சி கடந்த ஜூன் 24, 2026 அன்று ஸ்வீடன் நாட்டில் உள்ள கிருனா நகருக்கு அருகில் இருக்கும் Esrange விண்வெளி மையத்தில் நடந்தது. RHINOSHIELD நிறுவனத்தின் AirX பாதுகாப்பு கேஸ் பொருத்தப்பட்ட iPhone 17 Pro போனை, ஒரு பெரிய ஹை ஆல்டிட்யூட் பலூன் மூலம் சுமார் 30,607 மீட்டர் அதாவது 1,00,418 அடி உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

- Advertisement -

அங்கிருந்து போனை அப்படியே திறந்த வெளியில் விட்டுள்ளனர். பாராசூட் எதுவும் இல்லை, வேறு எந்த பாதுகாப்பும் இல்லை. கின்னஸ் விதிப்படி போன் கேஸ் நேரடியாக தரையை தொட வேண்டும்.

கீழே வரும்போது அந்த போன் சந்தித்தது சாதாரண விஷயம் இல்லை. -40°C முதல் -60°C வரை கடும் குளிர், கடல் மட்டத்தில் இருப்பதில் வெறும் 1% மட்டுமே காற்றழுத்தம். இந்த கடும் சூழலில் சுமார் 25 நிமிடங்கள் பயணித்து ஸ்வீடன் காட்டுப்பகுதியில் விழுந்துள்ளது.

டிராக்கிங் கருவி 2 கிலோமீட்டர் சுற்றளவை காட்டியும் கூட, மீட்புக் குழுவினர் 5 மணி நேரத்திற்கும் மேல் தேடிய பிறகுதான் போனை கண்டுபிடித்துள்ளனர்.

எடுத்துப் பார்த்தபோது போன் நல்லபடியாக வேலை செய்ததை கின்னஸ் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதன் மூலம் இயற்கையான நிலப்பரப்பில் போன் கேஸுடன் அதிக உயரத்தில் இருந்து போடப்பட்ட போன் என்ற கின்னஸ் சாதனையை RHINOSHIELD மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த Sent Into Space நிறுவனம் இணைந்து பெற்றுள்ளது

Related Articles

Latest Articles