செப்ரெம்பர் மாதத்தில் வாகன ஓட்டிகள் தங்கள் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் காரணமாக, கோத்தார்ட் சாலை சுரங்கப்பாதை பல இரவுகளுக்கு முழுமையாக மூடப்பட்டிருக்கும்.
செப்ரெம்பர் 7 முதல் 11 வரை, ஒவ்வொரு இரவும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சுரங்கப்பாதை மூடப்பட்டிருக்கும்.
அதைத் தொடர்ந்து வரும் மூன்று வேலை வாரங்களில், திங்கள் மாலை முதல் வெள்ளி காலை வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர மூடல்கள் நடைமுறையில் இருக்கும்.
மாற்றுப் பாதையாக, கோத்தார்ட் கணவாய் உட்பட பல பாதைகளை TCS பரிந்துரைக்கிறது.
மூலம்- bluewin


