14.6 C
New York
Sunday, September 27, 2026

உயர்தரப் பரீட்சையில் ‘3 ஏ’ அள்ளிக் குவித்த யாழ். மாணவர்கள்!

நேற்று வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தர தர பரீட்சை -2023 பெறுபேற்றின் அடிப்படையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 2ஏ சித்திகளை 30 மாணவர்களும் ஏ2பி சித்திகளை 24 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

- Advertisement -

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 30 மாணவிகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். 29 மாணவிகள் அங்கு 2ஏ பி சித்தியை பெற்றுள்ளனர்.

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 21 மாணவர்கள் 3 ஏ பெறுபேற்றைப் பெற்றுள்ளனர்.

பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 9 மாணவிகள் 3 ஏ பெறுபேற்றை பெற்றுக்கொண்டுள்ளனர். +

சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 19 மாணவர்கள் 3ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் கணிதப் பிரிவில் 4 மாணவர்களும், விஞ்ஞானப் பிரிவில் ஒருவருமான 5 மாணவர்கள் 3 ஏ சித்தியைப் பெற்றுள்ளனர்.

Related Articles

Latest Articles