4.5 C
New York
Friday, November 13, 2026

இலங்கை நீலக்கல் ஜெனீவாவில் 4.1 மில்லியன் பிராங்கிற்கு ஏலத்தில் விற்பனை.

ரஷ்ய அரசவையுடன் தொடர்புடைய, 197.80 கரட் எடையுள்ள ஒரு பிரம்மாண்டமான ரோமனோவ் நீலக்கல், ஜெனீவாவில் உள்ள சோதேபிஸ் ஏல நிறுவனத்தில் அதன் மதிப்பிடப்பட்ட விலையை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக, 4.1 மில்லியன் பிராங்கிற்கு விற்கப்பட்டது.

சுமார் 3.5 செ.மீ x 3 செ.மீ அளவுள்ளதும், 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ரோமனோவ் சேகரிப்பில் சேர்க்கப்பட்டதுமான இந்த அடர் நீல நிற இலங்கை நீலக்கல், புதன்கிழமை விற்பனைக்கு வருவதற்கு முன்னர், ஏல நிறுவனத்தால் 1.7 மில்லியன் பிராங் என மதிப்பிடப்பட்டிருந்தது என்று சோதேபிஸ் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இந்த நீலக்கல், 1927 ஆம் ஆண்டில், பெரும் நகை ஆர்வலரும் போலந்து வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க ஓபரா பாடகியுமான கன்னா வால்ஸ்காவால் வாங்கப்பட்டது.

இது 1971-ல் மீண்டும் ஏலத்தில் தோன்றியது, பின்னர் 1992-ல் ஜெனீவாவில் ஏலத்திற்கு வந்தது. அதன் பிறகு, 2015-ல் கார்டியர் தனது தற்போதைய வைரம் பதிக்கப்பட்ட கைக்காப்பு அமைப்பை உருவாக்கியது.

1924 மற்றும் 1926-க்கு இடையில் தொகுக்கப்பட்ட ரஷ்ய அரச ஆபரணங்களின் ஃபெர்ஸ்மேன் பட்டியல், ஃபேபர்கேவால் வைரப் பூண்கில் பதிக்கப்பட்ட இந்த நீலக்கல், ஒரு பதக்கமாக வழங்கப்பட்டது என்பதை வெளிப்படுத்துவதாக சோதபிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஏலத்தில் வழங்கப்பட்ட “அரச மற்றும் உயர்குடி” ஆபரணத் தொகுப்புகள் மொத்தம் 15.3 மில்லியன் பிராங்கை எட்டியதாக அந்த ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles