17.1 C
New York
Wednesday, September 10, 2025

உழவு இயந்திரத்தில் அமர்ந்திருந்த சிறுமி தவறி விழுந்து மரணம்.

மன்னார் –முருங்கன், பூவரசங்குளம் பகுதியில், நேற்றிரவு உழவு இயந்திரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுமி, தவறி விழுந்து, அதன் சில்லுக்குள் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 7 மணியளவில் இந்தச் சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

பூவரசங்குளம் பகுதியில் உள்ள விவசாயியான தந்தை,  ஒருவர் தனது  வயலில் உழுது கொண்டிருந்த போது,  உழவு இயந்திரத்தின் மட்காட் பகுதியில் அவரது 8 வயது மகள் அமர்ந்திருந்துள்ளார்.

சிறுமி திடீரென தவறி கீழே விழுந்த போது, உழவு இயந்திரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles