-5.7 C
New York
Sunday, December 28, 2025

சுவிஸ் அரசின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்.

உக்ரைன் அமைதி மாநாட்டில் ஈடுபட்டுள்ள  சுவிஸ் அரசாங்க மற்றும் அமைப்புகள் பலவற்றின இணையத் தளங்கள்  நேற்றுக் காலை சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக  சுவிட்சர்லாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள், இந்த வார இறுதியில்  பேர்கன்ஸ்டொக்கில் நடைபெறும் உக்ரைன் மாநாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ள, தேசிய சைபர் பாதுகாப்பு மையம், போன்ற மேலும் பல தாக்குதல்கள் மாநாட்டுக்கு முன்னும் பின்னும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் சிறிய செயலிழப்புகளுக்கு வழிவகுத்தாலும்,  இவை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் இருந்தன என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சைபர் தாக்குதலினால் நிறுவனங்களின் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படவில்லை என்றும்,   தற்போது கடுமையான அச்சுறுத்தல் இல்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச நிறுவனங்களில், சுவிஸ் சுங்கமும் அடங்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனால், சுங்க அறிவிப்புகளுக்காக,  மாற்று அவசர நடைமுறைகளுக்கு தற்காலிகமாக மாற வேண்டியிருந்தது என்றும், ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் அமைப்புகள் இயல்பு நிலைக்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவு மற்றும் அமைப்புகளின் பாதுகாப்பு எந்த நேரத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும்,  ஹக்கர்கள் தங்கள் அரசியல் செய்தியை பரப்பவும் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் சீர்குலைக்கும் சைபர் தாக்குதல்களை நடத்துகின்றனர் என்றும், சுவிட்சர்லாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

ஆங்கிலம் மூலம் – swissinfo

Related Articles

Latest Articles