20.1 C
New York
Wednesday, September 10, 2025

வெள்ள அபாயத்தினால் விஸ்ப்- சேமாட் இடையே ரயில்கள் ரத்து.

வெள்ள அபாயம் காரணமாக R40, RE41 மற்றும் RE42 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்று மதியம் தொடக்கம், வீதி வழியாகவோ, ரயில் மூலமாகவோ சேமாட்டை அடைய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்ப் மற்றும் சேமாட் (Visp and Zermatt) இடையே ரயில்கள் இயங்காது என்று மட்டர்ஹார்ன் கோட்ஹார்ட் ரயில்வே  செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

விஸ்ப் மற்றும் டாஸ் (Täsch) இடையே மாற்று பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்பா நதியில் வெள்ளிக்கிழமை காலை முதல்  நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதனால், சுற்றுலா கிராமத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறினார்.

வெள்ளிக்கிழமை காலை முதல் சேமாட்  அதிகாரிகள் அதிக முன்னெச்சரிக்கையுடன் உள்ளனர்.

ரோன் நதிக்கரை மற்றும்  வலாய்ஸ் மற்றும் வாட் கன்டோன்களில் உள்ள அதன் துணை நதிகளில் , வெள்ள அபாயம் காரணமாக இந்த வார இறுதியில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று கொண்டு வரப்பட்ட இந்தத் தடை திங்கட்கிழமை மாலை வரை அமுலில் இருக்கும்.

ரோன் நதியில் வெள்ள நீரோட்டம் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மூலம் -Swiss info

Related Articles

Latest Articles