சுவிசின் வௌட் மாகாணத்தில் முதியவர்கள் உள்ள வீடுகளில் பொலிஸ் அதிகாரியாக நடித்து கொள்ளையடித்த 20 வயதான பிரெஞ்சு இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லொசேனில் மட்டும் இவ்வாறான ஏழு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த சனிக்கிழமை Yverdon-les-Bains VD இல் உள்ள ஏரிஎம் இயந்திரம் முன்பாக நடமாடிய சந்தேக நபரை, கைது செய்ததாக லொசேன் மாநகர பொலிஸ் தெரிவித்துள்ளது.
வயதானவர்களிடமிருந்து திருடியதாக சந்தேகிக்கப்படும் ஒருவருடன் அவரது தோற்றம் ஒத்துள்ளது.
அவரிடம் நடத்திய சோதனையின் போது, அந்த நபருக்கு சொந்தமில்லாத வங்கி அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவரது விடுதி அறையில் சோதனை நடத்தியதில் பணமும், மற்றொரு வங்கி அட்டையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.
ஆங்கிலம் மூலம் – The Swiss times