சுவிஸ்- சூரிச்சின் வீடிகன் (Wiedikon) மாவட்டத்தில் பாரஊர்தி மோதியதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று Goldbrunnenplatz நோக்கிச் சென்ற பாரஊர்தியை 57 வயதுடைய ஓட்டுநர் திருப்பிய போது, மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த இளம் பெண் மீது மோதியுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் தலையில் படுகாயமடைந்த 24 வயதுடைய பெண், அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.