சுவிட்சர்லாந்தில் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு கடந்த ஆண்டு குழந்தைகள் பிறப்பு வீதம் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் மொத்தம் 80,000 குழந்தைகள் பிறந்தன.இது முந்தைய ஆண்டை விட 2.8% குறைவாகும்.
சுவிட்சர்லாந்தில் ஒரு பெண்ணுக்கான குழந்தைகளின் எண்ணிக்கை 2022 இல் 1.39 என்ற அளவில் இருந்தது. 2023 இல் இந்த எண்ணிக்கை 1.33 ஆக, முன்எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
வெளிநாட்டு குடியுரிமை கொண்ட பெண்களை விட (-0.8%) சுவிஸ் பெண்கள் (4.2%) மத்தியில் குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் வீதத்தின் வீழ்ச்சி மிகவும் அதிகமாக உள்ளது என மத்திய புள்ளியியல் அலுவலகம் (FSO) அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டில், 56,100 சுவிஸ் குடியுரிமை பெற்ற குழந்தைகளும், 23,900 வெளிநாட்டு குடியுரிமை கொண்ட குழந்தைகளும் பிறந்தன. இது 2022ஆம் ஆண்டின் எண்ணிக்கையை விட 2,300 குறைவாகும்.
ஆங்கிலம் மூலம் – Swissinfo