சூரிச்சில், Rümlang நோக்கிய Birchstrasse மிதிவண்டிப் பாதையில் இடம்பெற்ற விபத்தில், 56 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
புதன்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பந்தய மிதிவண்டியில் பயணம் செய்த அவர் வலதுபுறத்தில் உள்ள வேலியில் மோதி பின்னர் வேலிக் கம்பத்தில் மோதி படுகாயமடைந்தார் என்று சூரிச் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து குறித்து தகவல் தரக்கூடிய எவரும், குறிப்பாக விபத்து நடந்தபோது குறிப்பிடப்பட்ட பிரிவில் விமான நிலையத்தில் மிதிவண்டி பாதையைப் பயன்படுத்துபவர்கள், சூரிச் கன்டோனல் பொலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.
ஆங்கிலம் மூலம் – 20min