-3.3 C
New York
Sunday, December 28, 2025

வலதுசாரி தீவிரவாதிகளின் நிகழ்வை தடுத்து நிறுத்திய தோகோ கன்டோன் பொலிஸ்.

வலதுசாரி தீவிரவாத நிகழ்வு ஒன்றை, தோகோ கன்டோனல் பொலிசார்,  தடுத்து நிறுத்தியுள்ளனர்.

நேற்று பிற்பகல் அன்டர்சீ பகுதியில் இந்த நிகழ்வு நடைபெறவிருந்தது.

தோகோ கன்டோனல் பொலிஸ் அதிகாரிகள் இடத்தைக் கண்டுபிடித்து, சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கான மத்திய அலுவலகத்தின் ஆதரவுடன் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

சுமார் 50 பேர் சம்பவ இடத்தில் சோதனை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

பின்னர் வந்தவர்கள் மைதானத்திற்குள்  நுழைய தடைவிதிக்கப்பட்டது.

தோகோ கன்டோனல் பொலிசார், வரும் நாட்களில் அதிக அளவிலான கண்காணிப்பை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மூலம், –  20min

Related Articles

Latest Articles