வீதி விளக்குகள் பழுதடைந்துள்ளதால், பேர்னின் சில பகுதிகள் நேற்றிரவு இருளில் மூழ்கியிருந்தன.
வீதிகள் இருளில் இருப்பதாக ஒரு பயங்கரமான சூழ்நிலை காணப்படுகிறது.
எனினும், வீடுகளில் மின்விளக்குகள், இயங்குவதால், மக்கள் ஓரளவு நிம்மதியுடன் உள்ளனர்.
வீதிகளில் சமிக்ஞை விளக்குள் இயங்குகின்ற போதும் சாரதிகள் கவனமாக வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வீதிகள் இருளில் மூழ்கியிருப்பதால், சிலர் அலைபேசிகளின் வெளிச்சத்துடன் வீதிகளில் நடமாடினர்.
இந்த பழுதை நீக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மூலம், – 20min