ஆர்கோ கன்டோனில் உள்ள கிளிங்னோ என்ற இடத்தில் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில், இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 5 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் ஒன்பது வயது குழந்தையும் அடங்குவதாக ஆர்கோ கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
Klingnau மற்றும் Koblenz இடையே உள்ள பாதையில் சென்று கொண்டிருந்த கார், அறியப்படாத காரணத்தினால், எதிர்ப்பாதையில் வந்து எதிரே வந்த மெர்சிடிஸ் வாகனம் மீது மோதியது.
இரண்டு வாகனங்களும் பலத்த சேதம் அடைந்துள்ளன.
ஆங்கிலம் மூலம் -20min