யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுவன் நேற்றையதினம் குடல் ஒவ்வாமையினால் உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி மேற்கைச் சேர்ந்த கபிலன் கபிசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவனுக்கு நேற்று முன்தினம் முதல் வாந்தி ஏற்பட்டது.
இதையடுத்து, அச்சுவேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன், நேற்று அதிகாலை நான்கு மணியளவில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியில் உயிரிழந்துள்ளார்.
குடல் ஒவ்வாமையால் குறித்த உயிரிழப்பு சம்பவித்ததாக உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.