ஈரானில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை ஏவுவதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட ரஷ்யாவின் தளம் ஒன்று அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான செயற்கைக்கோள் படத்தையும் உக்ரைன் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் கடற்படையால் வெளியிடப்பட்ட புகைப்படங்களில் – கிராஸ்னோடரின் தெற்குப் பகுதியில் உள்ள ரஷ்ய விமானதளத்துக்கு அருகே பாரிய வெடிப்பு இடம்பெற்றுள்ளதை காட்டுகிறது.
இதுகுறித்து மொஸ்கோ இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் வெள்ளிக்கிழமை ஒரே இரவில் அந்தப் பிராந்தியத்தில் பல ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹித் ட்ரோன்களை இயக்கக் கற்றுக் கொடுக்கும் பல பயிற்றுனர்கள் மற்றும் பயிலுநர்கள் கொல்லப்பட்டதாக கீவ்வில் உள்ள கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரேனிய உளவுத்துறை அமைப்புகளுடன் இணைந்து இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
அனுராதபுர விமானப்படைத் தளத்தில் இதேபோன்று விடுதலைப் புலிகளின் கரும்புலி கொமாண்டோக்களால் தரிப்பிடத்தில் வைத்து பல ட்ரோன்கள் தாக்கி அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.