19.8 C
New York
Thursday, September 11, 2025

தரவுகள் மாயமானதால் மீண்டும் முடங்கிய சூரிச் விமான நிலையம்.

சூரிச் விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால், சூரிச் விமான நிலையத்தின் அனைத்து புறப்பாடுகளும் இடைநிறுத்தப்படும் நிலை ஏற்பட்டது.

நேற்று  பிற்பகல், Skyguide தகவல் தொழில்நுட்ப  சிக்கல்களை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்தே,  பாதுகாப்புக் கருதி சூரிச் விமான நிலையத்தில் அனைத்து புறப்பாடுகளும்  நேற்றுப் பிற்பகல் இடைநிறுத்தப்பட்டன.

வெள்ளிக்கிழமை ஜூரிச் விமான நிலையத்திலிருந்து சிறிது நேரம் விமானங்கள் எதுவும் புறப்படவில்லை.

மாலை 4.30 மணியளவில் இந்த சிக்கல் தீர்க்கப்பட்ட போதும், 50 வீதமான விமானங்களின் புறப்படுகை மற்றும் வருகைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் தாக்கம் நள்ளிரவு வரை நீடித்துள்ளது.

விமானப் பயணங்கள் தொடர்பான முக்கியமான தரவு காணாமல் போனதை அடுத்தே இந்த சிக்கல் ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியினால் ஐரோப்பிய  கால்பந்து தொடரில் பங்கேற்கும் சுவிஸ் அணியின் பயணமும் தாமதமானது.

நேற்று மாலை 5 மணிக்கு ஸ்ருட்கார்ட்டில் இருந்து பெர்லினுக்கு பறக்க வேண்டும், அங்கு

இத்தாலிக்கு போட்டியில் இன்று பங்கேற்கு் சுவிஸ் அணி  சூரிச்சிலிருந்து சுவிஸ் விமானம் மூலம் நேற்று பெர்லின் செல்லவிருந்தது.

சூரிச் விமானப் பறப்புகள் பாதிக்கப்பட்டதால்,இந்த அணியின் பயணமும் தாமதமானது.

ஆங்கிலம் மூலம் – 20min

Related Articles

Latest Articles