18.2 C
New York
Thursday, September 11, 2025

சூரிச் விமான நிலைய கட்டுப்பாட்டு மைய கோளாறு – விசாரணை தீவிரம்.

சூரிச் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு மையத்தில், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட, தகவல் தொழில்நுட்பக் கோளாறு குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

வெள்ளிக்கிழமை பிற்பகல் சூரிச் விமான நிலையத்தின் தரவுக் கட்டமைப்பில் தரவுகள் மாயமானதால், விமான நிலையச் செயற்பாடுகள் முடங்கின.

இதனால், 68 விமானங்களின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன. 18 விமானங்கள் புறப்படுவதும், 19 விமானங்கள் தரையிறக்குவதும் ரத்து செய்யப்பட்டன.

மேலும், 31 விமானங்கள் இரண்டு மணிநேரம் வரை தாமதத்துடன் இயக்கப்பட்டன.

ஸ்கைகைட் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நேற்றுமுன்தினம் மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை எந்த விமானமும் புறப்பட முடியவில்லை.

இந்த 90 நிமிடங்களில் விமானங்கள் தரையிறங்கும் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டது.

தற்போது இந்தக் கோளாறு  முழுமையாக சரி செய்யப்பட்ட நிலையில்,  இதற்கான காரணங்கள் குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன.

ஆங்கிலம் மூலம் – The swiss times

Related Articles

Latest Articles