ஜெனிவா விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக பயணிகள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல விமானப் பயணங்களில் ஏற்பட்ட தாமதத்தினாலும், உரிய நேரத்தில் பொதிகள் வந்து சேராமையாலும் பலர் ஜெனிவா விமான நிலையத்தில் மணிக்கணக்காக காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தரையிறங்கி பல மணித்தியாலங்களாகியும், தங்களால் வெளியே செல்ல முடியாதிருப்பதாக பயணிகள் பலரும் கூறியுள்ளனர்.
உரிய நேரத்தில் தங்களின் பயணப் பொதிகள் வந்து சேரவில்லை என்றும் அதனால் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை அண்மைய வானிலை குழப்பங்களினால் ஜெனிவா உள்ளிட்ட பல விமான நிலையங்களின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதால்,இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணிகளின் பொதிகளை உரிய நேரத்தில் ஒப்படைக்க முடியாதிருப்பதாகவும் இன்னொரு பகுதியில் பொதிகள் தேங்கியிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஆங்கிலம் மூலம்- 20min