லுகானோவில் உள்ள நகைக் கடையில் நேற்றுக்காலை கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர் என டிசினோ கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
நேற்றுக் காலை, 11.40 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
லுகானோவில் உள்ள வியா பெசினாவில் கடிகாரங்கள் விற்பனையில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு நகைக கடையில் கொள்ளை முயற்சி இடம்பெற்றது.
கடையில் குற்றவாளிகளை கவனித்த பொலிஸ் ரோந்து அணியினர், நகைக்கடையின் உள்ளே இருவரையும், வெளியே ஒருவரையுமாக மூன்று கொள்ளையர்களைக் கைது செய்தனர்.
நான்காவது நபர். தப்பியோடிய நிலையில் கதீட்ரல் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கையின் போது, லுகானோ நகர பொலிஸ் அதிகாரி ஒருவர், இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தனது தப்பாக்கியைப் பயன்படுத்தியிருந்தார். எனினும் எவருக்கும்காயங்கள் ஏற்படவில்லை.
மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஆங்கிலம் மூலம்- 20min