இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 100 பேர் வரை உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசம் மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தரா ராவ் நகரில், போலே பாபா சத்சங்கம் என்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று நடந்தது.
இதன்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் உட்பட 100 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்து பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.