15.8 C
New York
Thursday, September 11, 2025

சூரிச்சில் காற்றாலைகளை அமைக்க 52 இடங்கள் தேர்வு.

காற்றாலைகளை அமைப்பதற்கு சூரிச் அரசாங்க சபை, தீர்மானித்துள்ளது.

உள்நாட்டு, புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி மற்றும் விநியோக பாதுகாப்பை வலுப்படுத்த, காற்றாலை மின் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது,

முதல் கட்டமாக, காற்றாலைகளை அமைப்பதற்கான 46 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தஇடங்களில் 235 மீட்டர் உயரம் வரை 120 காற்றாலைகளை நிறுவலாம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காற்றாலைகளின் கட்டுமானம் 2030 இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலதிக மதிப்பாய்வுகளின் போது, ​​மேலும் ஆறு சாத்தியமான பொருத்தமான இடங்கள் கண்டறியப்பட்டு, தற்போது, மொத்தம் 52 சாத்தியமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவற்றில் சூரிச் வைன் பிராந்தியம் மற்றும் அல்பிஸ் மேற்குப் பகுதிகளில் 20 இடங்களில் காற்றாலைகளை அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஆங்கிலம் மூலம்- 20min

Related Articles

Latest Articles