14 C
New York
Friday, May 15, 2026

கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தவர் குழிக்குள் புதையுண்டு மரணம்.

ரஷ்லிகனில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 53 வயதான தொழிலாளர் ஒருவர் குழி ஒன்றுக்குள் புதைந்து உயிரிந்துள்ளார்.

நேற்றுக்காலை 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக சூரிச் கன்டோனல் காவல்துறை தெரிவித்தது.

3 மீற்றர் ஆழமான குழி  ஒன்றின் பக்கச் சுவர் சரிந்து விழுந்ததில், குறித்த தொழிலாளி நிலத்தில் புதையுண்டு பலத்த காயமைடைந்தார்.

உடனடியாக மீட்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்தார் என பொலிசார் கூறினர்.

ஆங்கிலம் மூலம்- 20min

Related Articles

Latest Articles