2.3 C
New York
Sunday, March 29, 2026

சுவிசில் மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு.

சுவிட்சர்லாந்தில் மனிதர்களின்  ஆயுட்காலம் மீண்டும் சாதனை அளவை எட்டியுள்ளதாக, லௌசான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

2023 இல் பெண்களின் ஆயுட்காலம்,  85.5 ஆண்டுகளாகவும்,  ஆண்களின் ஆயுட்காலம்  82.2 ஆண்டுகளாகவும் இருந்தது என அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டில், பெண்களின் ஆயுட்காலம் 85.6 ஆண்டுகளாகவும், ஆண்களின் ஆயுட்காலம்  81.9 ஆண்டுகளாகவும் இருந்தது.

2020 ஆம் ஆண்டில், கோவிட்  தொற்று தொடங்கியவுடன் இது,  பெண்களின் ஆயுட்காலம், 85.1  ஆண்டுகளாகவும், ஆண்களின் ஆயுட்காலம்  81 ஆண்டுகளாகவும் குறைந்தது.

அதற்குப் பின்னர், 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஆயுட்காலம் அதற்குக் கீழாகவே இருந்து வந்தது என்றும் லௌசான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலம் மூலம்- swissinfo

Related Articles

Latest Articles