1.8 C
New York
Sunday, March 29, 2026

துனா சான்விச்சிற்குள் உலோக கிளிப் – இளைஞன் அதிர்ச்சி.

ஆசையுடன் வாங்கிச் சாப்பிட்ட துனா சான்விச்சிற்குள், உலோக கிளிப் ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக 20 வயது இளைஞனான மைக் சால்மன் தெரிவித்துள்ளார்.

ஓல்டனில் ( Olten) உள்ள சோகார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில், அவர் காலையுணவுக்காக இந்த துனா சான்விச்சை வாங்கியுள்ளார்.

அதனை அவர் ஒருமுறையே கடித்துச் சாப்பிட்டுள்ளார்.

அதன் பின்னரே அதற்குள் உலோக கிளிப் ஒன்று இருப்பதை கண்டு, அதன் பின்னர் அதனை சாப்பிடாமல் தவிர்த்துள்ளார்.

இதுகுறித்து சோகார் நிறுவனத்திடம் முறையிடப்பட்டுள்ளது.

இந்த தவறுக்காக அவர்கள் மன்னிப்புக் கோரியுள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலம் மூலம் – 20min

Related Articles

Latest Articles