20.1 C
New York
Wednesday, September 10, 2025

இன்று அதிகாலை மற்றொரு ஏடிஎம் வெடித்தது- பணம் கொள்ளை.

வோட் கன்டோனில் உள்ள, சவிக்னியில் இன்று அதிகாலை  ஏடிஎம்  இயந்திரத்தை வெடிக்க வைத்து அதிலிருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்த  வெடிப்பினால் குடியிருப்பு மற்றும் வணிக கட்டடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டதாக கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

இதற்கு வெடிபொருள் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதால் சுவிட்சர்லாந்தின் சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் 24 ஏடிஎம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு, பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில்32 இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றன.

அண்மையில் குறிப்பாக  எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில் ஏடிஎம்கள் தாக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு பதிலடியாக,  ஏடிஎம்களின் எண்ணிக்கையை குறைப்பதாக நியூசெட்டல் மற்றும் ஜூரா  கன்டோனல் வங்கிகள் அறிவித்திருந்தன.

Related Articles

Latest Articles