-3.3 C
New York
Sunday, December 28, 2025

பிரித்தானியாவில் ஆளும்கட்சி படுதோல்வி – அதிகாரத்தை கைப்பற்றுகிறது தொழிற்கட்சி

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், தொழிற்கட்சி 400 ஆசனங்களுடன் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று நடந்த பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இடம்பெற்று வரும் நிலையில், 410 ஆசனங்களை கைப்பற்றி தொழிற்கட்சி ஆட்சியமைக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதனை ஒட்டியே தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

தற்போதைய நிலவரங்களின்படி, தொழிற்கட்சி 162 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது.

கொன்சர்வேட்டிவ் கட்சி கொன்சர்வேட்டிவ் கட்சி 26 ஆசனங்களையும், லிபரல் ஜனநாயக கட்சி 18 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

650 ஆசனங்களைக் கொண்ட பிரித்தானிய நாடாளுமன்றத்தில், ஆட்சியமைப்பதற்கு, 326 ஆசனங்கள் தேவை.

இந்த தேர்தலில், 400 ஆசனங்களுக்கும் மேல் கைப்பற்றும் நிலையில் உள்ள தொழிற்கட்சியின் கெய்ர் ஸ்டாமர் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.

Related Articles

Latest Articles