26.3 C
New York
Sunday, June 22, 2025

2.99 இலட்சம் பிராங்குகளுக்கு ஏலம் போன ZH 24 இலக்கத் தகடு.

சுவிசில் வாகன இலக்கத் தகடு ஒன்று, 2 இலட்சத்து 99 ஆயிரம் பிராங்குகளுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை மாலை சூரிச் வீதிப் போக்குவரத்து அலுவலகத்தினால் இணையவழி ஏலம் நடத்தப்பட்டது.

இதன்போது, இதுவரை ஏலத்தில் விடப்பட்ட மிக குறைந்த இலக்கங்களைக் கொண்ட ZH 24 என்ற இலக்கத் தகட்டை, ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது.

இறுதியில். ZH 24 என்ற இலக்கத் தகட்டை ஒருவர், 299,000 சுவிஸ் பிராங்குகளுக்கு (331,629 டொலர்) ஏலத்தில் எடுத்தார்.

இதுவே சுவிசில் அதிக விலைக்கு ஏலத்தில் விற்கப்பட்ட இலக்கத்தகடு ஆகும்.

2018 ஆம் ஆண்டில், 233,000 அந்த பிராங்குகளுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ZG 10 என்ற இலக்கத் தகடு இதுவரை மிகவும் விலையுயர்ந்ததாக இருந்து வந்த நிலையில், அந்த சாதனை இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

சூரிச் கன்டோனில், ZH 100 என்ற இலக்கத் தகட்டை,   கார் உரிமையாளர் ஒருவர், 2022 இல் 226,000 பிராங்குகளுக்கு ஏலத்தில் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம் – swissinfo

Related Articles

Latest Articles