16.6 C
New York
Thursday, September 11, 2025

புகலிடக் கோரிக்கை தொடர்பான புதிய மூலோபாயத்தை உருவாக்குகிறது சுவிஸ்.

புகலிடக் கோரிக்கை தொடர்பான புதிய மூலோபாயத்திற்கான முக்கிய இலக்குகளை சுவிட்சர்லாந்து வரையறுத்துள்ளது.

சுவிஸ் கூட்டாட்சி அரசு, கன்டோன்கள், நகரங்கள் மற்றும் நகராட்சிகளுடன் இணைந்து, இந்தப் புதிய புகலிட மூலோபாயத்தை உருவாக்குகின்றன.

இதற்காக அமைக்கப்பட்ட புகலிடக் குழு வியாழக்கிழமை ஆறு நடவடிக்கை துறைகளை இனங்கண்டு வரையறுத்துள்ளது.

புகலிடப் பகுதியில் தகவல் தொடர்பு, அகதிகள் சொந்த நாடுகளுக்குத் திரும்புதல் மற்றும் சுவிஸ் புகலிட அமைப்பை மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்குவதாக, குடியேற்றத்திற்கான அரச செயலகம் நேற்று அறிவித்துள்ளது.

திருத்தப்பட்ட புகலிடச் சட்டம் 2019  மார்ச் 1, ஆம் திகதி  நடைமுறைக்கு வந்ததிலிருந்து,  புகலிட அமைப்பு மறுசீரமைப்பு அடிப்படையில் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்,  அதிக எண்ணிக்கையிலான புகலிட விண்ணப்பங்களின் காரணமாக, புகலிட மூலோபாயம் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் மற்றும் தேவைப்பட்டால் சரிசெய்யப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மூலம், – swissinfo

Related Articles

Latest Articles