16.6 C
New York
Thursday, September 11, 2025

மீண்டும் மிரட்டும் மழை- டிசினோவில் அவசரமாக வெளியேற்றப்படும் மக்கள்.

வாரஇறுதியில் மழை பெய்யும் என விடுக்கப்பட்டுள்ள முன்னறிவிப்பை அடுத்து, டிசினோவில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையைின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பற்ற இடங்களில் இருந்து மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பவோனா பள்ளத்தாக்கிலுள்ள  மக்களை முழுவதுமாக வெளியேற்றும் நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.

இவர்கள் ஹெலிகொப்டர்கள்  மூலம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் பல இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி இன்றும் மேற்கொள்ளப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை விட்டு வெளியேற குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆபத்தான பகுதிகளுக்கான வீதிகளும், தனியார் போக்குவரத்திற்கு மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் தங்க வசதியில்லாதவர்களுக்கு அஸ்கோனாவில் உள்ள சிவில் பாதுகாப்பு மையத்தில் தங்குமிடம் வழங்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம், – zueritoday

Related Articles

Latest Articles