3 C
New York
Monday, December 29, 2025

இனி அசைவ உணவுகள் இல்லை – பேர்ன் நகரசபை தீர்மானம்.

பேர்ன் நகர சபை இனி அதன் நிகழ்வுகளில் இறைச்சி அல்லது மீன் உணவுகளைப் பரிமாறுவதில்லை என தீர்மானித்துள்ளது.

பேர்ன் நகர சபையின் நிகழ்வுகளில் சைவ உணவை மட்டுமே வழங்குவது தொடர்பான தீர்மானம் கடந்த வியாழக்கிழமை, நிறைவேற்றப்பட்டது.

இதற்கு 41 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 23 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத ஊட்டச்சத்து விடயத்தில், நகர சபை ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள SVP மற்றும் FDP  கட்சிகள், இந்த திட்டம் இறைச்சி உண்பவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக தெரிவித்துள்ளது.

இறைச்சி தடையானது சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதை காட்டுவதாக  SVP கட்சி தெரிவித்துள்ளது.

மூலம், – 20min

Related Articles

Latest Articles