18.2 C
New York
Thursday, September 11, 2025

பிரெஞ்சு நாடாளுமன்றத் தேர்தல்- சுவிஸ் பிரதிநிதி ஃபெராச்சி மீண்டும் வெற்றி.

சுவிட்சர்லாந்தில் உள்ள பிரெஞ்சு குடிமக்களால், மார்க் ஃபெராச்சி, மீண்டும் பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று நடந்த பிரெஞ்சு நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாவது சுற்றில் சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகியவற்றை உள்ளடக்கிய  ஆறாவது தொகுதியில் இருந்து ஃபெராச்சி 34,771 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இடதுசாரி வேட்பாளரும், ஜெனிவாவில் SP இன் உறுப்பினருமான ஹலிமா டெலிமி 23,687 வாக்குகளைப் பெற்றுள்ளார் என பிரான்ஸ் உள்துறை அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைனில் சுமார் 160,000 பிரெஞ்சு குடிமக்கள் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர்.

பிரான்சுக்கு வெளியே சுவிட்சர்லாந்தில் மிகப்பெரிய பிரெஞ்சு சமூகம் உள்ளது.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் மறுமலர்ச்சிக் கட்சியின் பிரதிநிதியான ஃபெராச்சி, முன்னர் பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் பிரெஞ்சு நாட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

 மூலம் – The swiss times

Related Articles

Latest Articles