ஜெர்மனியின் கொன்ஸ்டன்ஸ் நகரில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டுத், தப்பியோடிய இருவர் சுவிசின் துர்கோ கன்டோன் பொலிசாரார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இவர்கள் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் அதில் ஒருவர் பலத்த காயமடைந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள 34 மற்றும் 20 வயதுடைய சந்தேக நபர்களை ஜெர்மனியிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் தற்போது சுவிட்சர்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.
மூலம் – The swiss times