துர்கோ கன்டோனில், Bischofszell இல் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிலையங்கள் அமைந்துள்ள கட்டடத்தில் நேற்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர். எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
- Advertisement -

கடும் புகை மூட்டத்தால் அப்பகுதி காவல்துறையினரால் தடை செய்யப்பட்டது.
கடும் புகை காரணமாக வீடுகளில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடவும், காற்றோட்டத்தை அணைக்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தீவிபத்தை அடுத்து அந்த கட்டடத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மூலம் – The swiss times


