21.6 C
New York
Friday, September 12, 2025

சுவிசில் அதிகரிக்கும் கருக்கலைப்புகள் – ‘கவலைக்குரிய வளர்ச்சி’

கடந்த வாரம், மத்திய புள்ளியியல் அலுவலகம் சுவிட்சர்லாந்தில் கருக்கலைப்பு பற்றிய அண்மைய புள்ளிவிவரங்களை வெளியிட்டது.

இவை 2017 ஆம் ஆண்டிலிருந்து ஒரு தெளிவான மேல்நோக்கிய போக்கைக் காட்டியுள்ளன.

அத்துடன், 2023 இல்  11,782 என்ற உச்சத்தையும் எட்டியுள்ளது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுவிசில் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ள போதிலும், இந்த அதிகரிப்பு பேர்னில் கேள்விகளை எழுப்புகிறது.

இது ஒரு கவலைக்குரிய வளர்ச்சி என்று SVP தேசிய சபை உறுப்பினர்களான  Céline Amaudruz மற்றும் Martina Bircher ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

“எந்தச் சூழ்நிலையிலும் கருக்கலைப்பு ஒரு சாதாரணமான செயலாக மாறக்கூடாது” என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அதிகரிப்புக்கான காரணம் அவசரகால கருத்தடை முறைகளை அணுகுவதில் உள்ள சிரமமாகவும் இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், சுவிசில் கருத்தடை மாத்திரை மிகவும் கண்டிப்பாக கட்டுப்படுத்தப்படுகிறது.

மேலும் சுமார் 45 முதல் 70 பிராங்குகள், என அதிக விலை உள்ளது. சுவிட்சர்லாந்தில் மருந்துகளை விளம்பரப்படுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

மூலம் – 20min

Related Articles

Latest Articles