6.5 C
New York
Friday, April 3, 2026

பொலிஸ் என ஏமாற்றி முதியவரிடம் 10 ஆயிரம் பிராங் திருடிய பிரெஞ்சு பெண்கள் கைது.

வோட் கன்டோனில், பெண் பொலிசார் என ஏமாற்றி, முதியவர் ஒருவரிடமிருந்து 10,000 பிராங்குகளை திருடிச் சென்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை, வோட்  கன்டோனல் பொலிஸ் மோப்ப நாய்க் குழுவினர், இந்த இரண்டு சந்தேக நபர்களையும் Montreux மற்றும் Villeneuve இல் கண்காணித்து கைது செய்தனர்.

சந்தேக நபர்களில் ஒருவரை சோதனையிட்ட போது, ​​Montreux இல் வசிப்பவரிடமிருந்து திருடப்பட்ட தொகைக்கு இணையான பணத்தாள் கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வோட் கன்டோனல் பொலிசார் நேற்று தெரிவித்தனர்.

பெண் பொலிசார் போடி ஏமாற்றி, திருட்டில் ஈடுபட்டிருந்த 20 மற்றும் 21 வயதுடைய இரண்டு பிரெஞ்சுப் பெண்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மறுநாள், சட்டமா அதிபர் அலுவலகம், மோசடி, மோசடி முயற்சி, கணினியை மோசடி செய்தல் மற்றும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றங்களுக்காக அவர்களுக்கு 100 நாட்கள் இடைநிறுத்தப்பட்ட  சிறைத்தண்டனை விதித்தது.

இதையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மூலம் – theswisstimes

Related Articles

Latest Articles