7.1 C
New York
Tuesday, December 30, 2025

பாசெல் நகர குடியிருப்பில் நேற்றிரவு தீவிபத்து – வானளாவிய புகைமூட்டம்.

தீவிபத்தினால் பாசெல் நகர வானத்தில் நேற்றிரவு அடர்ந்த புகை மூட்டம் எழுந்தது.

Feldbergstrasse இல் ஏற்பட்ட தீ விபத்துக் குறித்து, இரவு 8 மணியளவில் தகவல் கிடைத்ததாக பாசெல் கன்டோன் பொலிஸ் அறிவித்துள்ளது.

இந்த தீவிபத்தினால் ஒரு குடியிருப்பு கட்டடம் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

அபாயச் சங்கு ஒலித்ததாகவும், அந்தப் பகுதிக்கான போக்கு வரத்துகள் தடுக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீவிபத்து கட்டுப்படுத்தப்பட்ட போதும், யாருக்கேனும் காயங்கள் ஏற்பட்டதா, எவ்வாறு தீவிபத்து ஏற்பட்டது என்ற தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

மூலம் – 20min

Related Articles

Latest Articles