16.3 C
New York
Friday, September 12, 2025

சிறுவர்களுக்கு இ-சிகரெட் விற்பதை தடை செய்தது வோட் கன்டோன். 

சிறுவர்களுக்கு இலத்திரனியல் சிகரெட்டுகளை விற்பனை செய்வது வோட் கன்டோனில்,  தடை  செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தயாரிப்புகளை பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சூடாக்கப்பட்ட புகையிலை பொருட்கள் உட்பட அனைத்து புகையிலை பொருட்கள் மற்றும் இலத்திரனியல் சிகரெட்டுகள், பஃப் பார்கள் (ஒருமுறை பயன்படுத்தக்கூடிய மின்-சிகரெட்டுகள்) மற்றும் பிற தொடர்புடைய பொருட்கள், நிகோடின் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவற்றை இனி விற்பனை செய்யவோ அல்லது சிறுவர்களுக்கு வழங்கவோ கூடாது என வோன் கன்டோன் அரசாங்க அவையில் நேற்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் ஜூலை 15 முதல் அமுலுக்கு வருகிறது.

இவற்றின் நுகர்வு இப்போது பொது இடங்களுக்கு உள்ளே அல்லது மூடப்பட்ட இடங்களில் தடைசெய்யப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு விற்பனை  செய்வதற்கான தடைக்கு மேலதிகமாக சில்லறை விற்பனையாளர்கள் வாங்குபவர்களின் வயதை அடையாள அட்டை மூலம் சரிபார்க்க வேண்டும் என்றும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மூலம் – theswisstimes

Related Articles

Latest Articles