16.5 C
New York
Wednesday, September 10, 2025

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துப்பாக்கிச் சூட்டில் இருந்து உயிர் தப்பியுள்ளார்.

குடியரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடவுள்ள அவர், பென்சில்வேனியாவில் நடந்த பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில், ட்ரம்புடன் இருந்த ஒருவர் மரணமானார். அவர் காதில் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

அவரது முகம், காதுப் பகுதிகளில் இரத்தம் காணப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

அவர் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ட்ரம்பை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles