Nidwalden கன்டோனில் உள்ள Wolfenschiessen அருகே பாராகிளைடர் விமானி ஒருவர் போக்குவரத்து கயிற்றில் சிக்கி அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டது.
நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
- Advertisement -

ஹெலிகொப்டர் மூலம், போக்குவரத்து கயிற்றின் மலை நிலையத்திற்கு மீட்புப் பணியாளர்கள் கொண்டு செல்லப்பட்டு, பாராகிளைடர் விமானியை நோக்கி, ஒரு மீட்பு வீரர் போக்குவரத்து கயிற்றின் மூலம்,இறங்கினார்.
5 மணிக்குப் பின்னர், பாராகிளைடர் விமானியை அடைந்து, அவரைப் பாதுகாக்க முடிந்தது.
அரை மணி நேரம் கழித்து, பாராகிளைடர் விமானி, தரையில் இறக்கப்பட்டார்.
மூலம் – 20min


