2 C
New York
Monday, December 29, 2025

A2 நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த கார்.

A2 நெடுஞ்சாலையில் Zunzgen அருகே Basel நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு கார் தீப்பற்றி முற்றிலுமாக எரிந்து நாசமாகியது.

சனிக்கிழமை இரவு இரவு 9:35 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

அவசர சேவைகள் உதவிக்குச் சென்ற போது, ​​​​வாகனம் முழுவதுமாக எரிந்து கொண்டிருந்தது.

தீயணைப்பு படையினர் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

காரில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் இன்னும் முழுமையாக கண்டறியப்படப்படாத போதும், தொழில்நுட்ப காரணத்தால் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த மே 11ஆம் திகதி இதே இடத்தில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

தீ விபத்தின் காரணமாக, Basel  நோக்கிய வீதியில்,  பெல்சென் சுரங்கப்பாதை மற்றும் டீக்டன் மோட்டார் பாதை நுழைவாயில் சிறிது நேரம் மூடப்பட்டதால்,  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மூலம் – 20min

Related Articles

Latest Articles