3 C
New York
Monday, December 29, 2025

கயிற்றில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய பரா கிளைடர் விமானி.

Nidwalden கன்டோனில் உள்ள Wolfenschiessen அருகே பாராகிளைடர் விமானி ஒருவர் போக்குவரத்து கயிற்றில் சிக்கி அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டது.

நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஹெலிகொப்டர் மூலம், போக்குவரத்து கயிற்றின் மலை நிலையத்திற்கு மீட்புப் பணியாளர்கள் கொண்டு செல்லப்பட்டு, பாராகிளைடர் விமானியை நோக்கி, ஒரு மீட்பு வீரர் போக்குவரத்து கயிற்றின் மூலம்,இறங்கினார்.

5 மணிக்குப் பின்னர், பாராகிளைடர் விமானியை அடைந்து,  அவரைப் பாதுகாக்க முடிந்தது.

அரை மணி நேரம் கழித்து, பாராகிளைடர் விமானி, தரையில் இறக்கப்பட்டார்.

மூலம் – 20min

Related Articles

Latest Articles