0.6 C
New York
Friday, February 13, 2026

ஆறுகளில் காத்திருக்கும் ஆபத்து – பொலிஸ் எச்சரிக்கை.

தற்போது ஆறுகளில் நீச்சலடிக்க வேண்டாம் என்று,  சுவிஸ் உயிர்காக்கும் சங்கமும், பொலிசாரும், பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

அதிகளவு நீர் பாய்வதன் காரணமாக, கணிக்க முடியாத மற்றும் ஆபத்தான சுழல் மற்றும் நீரோட்டங்கள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனுபவமற்ற நீச்சல் வீரர்கள் மற்றும் நீச்சல் தெரியாதவர்கள் கரையில் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீரில் விழுவது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆற்றில் மூழ்கிய ஒருவர் பற்றிய முறைப்பாடு பொலிசாருக்கு கிடைத்துள்ளது.

அவரைத் தேடும் பணிகளில் பெருமளவிலான மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Glarus கண்டோனைச் சேர்ந்த 31 வயதுடைய ருமானியர், St. Gallen கன்டோனில் உள்ள, Schänis அருகே Linth ஆற்றில் இறங்கி நீச்சலில் ஈடுபட்ட போது காணாமல் போயுள்ளார்.

கடந்த புதன் கிழமையும், 19 வயது ஆப்கானிஸ்தான் இளைஞன், சூரிச்சில் உள்ள ஆற்றில் நீந்தியபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

மூலம் –zueritoday

Related Articles

Latest Articles