
பேராசிரியர் புஸ்பரட்ணத்தின் ஆனைக்கோட்டை தொல்லியல் தளத்தின் மீதான ஆய்வு குறித்த தாகம் தணியாமையினால் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினுடைய வரலாற்றுத் துறை விரிவுரையாளர்கள், மாணவர்களுடன் சேர்ந்து இந்த ஆண்டின் நடுப்பகுதியில் மீண்டும் தொடங்கினார்.
இவ் ஆய்வில் நாணயங்கள், சிப்பிகள், மட்பாண்டத்துண்டுகள், இரும்புகள், உலோகங்கள், பண்டைய கருவிகள், மனித எலும்புக்கூடுகள் என்பன கண்டெடுக்கப்பட்டன.
இவ் ஆய்வானது பல்வேறு கோணங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பண்பாட்டு மரபுரிமையின் தோற்றுவாயை அறிந்திட ஆவல் கொள்வது வழமை. அந்த வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 50வது நிறைவைப் பூர்த்தி செய்கின்ற இந்த ஆண்டிலே தகைசார் பேராசிரியர் புஸ்பரட்ணம் மற்றும் அவருடைய மாணவர்களின் தொடர்ச்சியான இந்த ஆய்வுப்பணி வரவேற்கத்தக்ககது.
இங்கு சிறந்த, நன்கு கட்டமைக்கப்பட்ட ஓர் சமூகம் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
நாம் அனைவரும் இவ் ஆய்வினை ஊக்கப்படுத்துவதோடு ஆய்வாளர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த ஆதரவையும் வழங்குவோமாக.


