Basel கன்டோனில் உள்ள Muttenzerweg இல், வாகன நிறுத்துமிடத்தில் திடீரென ஒரு வெடிப்பை அடுத்து கார்கள் தீப்பற்றி எரிந்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 6:20 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெடிப்புச் சத்தம் ஒன்றை அடுத்து, கார்களில் தீப்பற்றியுள்ளது.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதும் 3 கார்கள் எரிந்துள்ளன.
இந்தச் சம்பவத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், குற்றவியல் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
மூலம்- 20min.

