S-Bahn ரயில் கார் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில், Stadlerstrasse ரயில்வே கடவைக்கு அருகே உள்ள ரயில் பாதையில் இந்த விபத்து இடம்பெற்றதாக Winterthur நகர பொலிசார் தெரிவித்தனர்.
Oberwinterthur இல் இருந்து ரயில் வந்து கொண்டிருந்த போது கார், ஏற்கனவே ரயில் பாதையில் இருந்தது.
ரயில் ஓட்டுனர் ரயிலை நிறுத்த முடியாமல், நின்று கொண்டிருந்த காரின் மீது மோதினார்.
இந்த விபத்தில் காரின் சாரதியான 78 வயதுடைய சுவிஸ் நாட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கார் சாரதி இதுவரை அறியப்படாத காரணங்களுக்காக தண்டவாளத்தில் நிறுத்தியிருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர்.
விபத்துக்கான சரியான சூழ்நிலைகள் தெளிவாக இல்லை.
S-Bahn ரயிலில் இருந்த பயணிகள் காயமின்றி தப்பினர்.
Oberwinterthur- Seuzach இடையே ரயில் போக்குவரத்து, இரவு 9 மணி நிறுத்தப்பட்டிருந்தது.
மூலம் -Zueritoday

